கியூர் கிளினிக் பேச்சு மற்றும் காது பரிசோதனை சிறப்பு முகாம்
கியூர் கிளினிக் பேச்சு மற்றும் காது பரிசோதனை சிறப்பு முகாம்
ADDED : அக் 30, 2026 04:21 AM

புதுச்சேரி: புதுச்சேரி மூகாம்பிகா பேச்சு கேப்பியல் மறுவாழ்வு கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம், கியூர் காது கருவிகள் பேச்சு கிளினிக் சார்பில், சுப்புலட்சுமி ரத்தினவேலு அம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேச்சு மற்றும் காது பரிசோதனை முகாம் நேற்று துவங்கி நாளை 31ம் தேதி வரை நடக்கிறது.
முகாமை கல்லுாரி முதல்வர் வேணுகோபால், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செல்வகுமார், மெட்பார்மசி நிர்வாக இயக்குநர் மன்சூர்அலி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
கிளினிக் நிர்வாக இயக்குநர் முத்துக்குமரன் ஞானசேகரன் வரவேற்றார். துணை நிர்வாக இயக்குநர் அனுஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.
முகாமில் பேராசிரியர் முத்துக்குமரன் ஞானசேகரன் பேச்சு மற்றும் காது பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
முகாமில் ஆதரவற்ற குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், செவித்திறன் குறைபாடு உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு காது கருவிகள் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாக வழங்கப்படும். பொதுமக்களுக்கு 15 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
