/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புறவழிச் சாலையில் குப்பை கொட்டிய வாகனம் பறிமுதல்: போலீசார் அதிரடி
/
புறவழிச் சாலையில் குப்பை கொட்டிய வாகனம் பறிமுதல்: போலீசார் அதிரடி
புறவழிச் சாலையில் குப்பை கொட்டிய வாகனம் பறிமுதல்: போலீசார் அதிரடி
புறவழிச் சாலையில் குப்பை கொட்டிய வாகனம் பறிமுதல்: போலீசார் அதிரடி
ADDED : நவ 14, 2025 01:28 AM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச் சாலையோரத்தில், குப்பை கொட்டிய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை, சாய்பாபா கோவில் அருகில் பி.ஒய்.05.எப். 0344 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேனை டிரைவர் நிறுத்தி, அதில் இருந்த குப்பைகளை சாலையோரத்தில் கொட்டிக் கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து, விசாரித்தனர். அவர், மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த வெங்கடேசன்,55; என்பதும், இவர் சொந்தமாக வேன் வைத்து, பழைய வீடுகளை வீடுகளை இடித்து அகற்றும் வேலை செய்து வருவதும். அதன்படி மூலக்குளத்தில் இடித்து அகற்றிய வீட்டின் கழிவுகளை கொண்டு வந்து அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் கொட்டியது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், வேன் டிரைவர் வெங்கடேசன் மீது பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.