/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவப்பா இருந்ததால் சந்தேகிக்கவில்லையாம்: புதுச்சேரி கவர்னர் மாளிகை விவகாரத்தில் போலீசார் அதிர்ச்சி தகவல்

ADDED : மார் 12, 2026 04:25 AM

புதுச்சேரி: 'சிவப்பாக இருந்ததால்' கவர்னரின் உறவினர் என்று நினைத்து போதை மாணவரை சந்தேகப்படவில்லை என, போலீசார் கூறிய தகவல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில், கடந்த 9ம் தேதி இரவு 10:45 மணிக்கு குருசுக்குப்பம் சாலையில் உள்ள இரண்டாவது கிரில் கேட்டில் ஏறி, உள்ளே சென்று கவர்னரின் மகன் அறையில் உடைகளை கழட்டி போட்டு, துாங்கிய ஜார்க்கண்ட் மாநில மாணவர் ஹர்திக் ஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் சர்வ சாதாரணமாக 'கேட்' ஏறி நுழைந்து போதை மாணவர் துாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த அன்றிரவு கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் ஊழியர்களை வெளியே விடாமல், கவர்னர் மாளிகையிலேயே போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர்.
அதில், மாணவர் நுழைந்த இரண்டாவது கேட்டில் பணியில் இருக்க வேண்டிய இரண்டு ஐ.ஆர்.பி.என்., போலீசாரும் எங்கு சென்றனர் என்ற தகவல் இல்லை. கண்காணிப்பு கேமரா மானிட்டரையும் கவனிக்காமல் இருந்துள்ளனர். மேலும் போதை மாணவர் முதல் மாடி காரிடரில் நடந்து செல்லும் போது போலீஸ்காரர் ஒருவர் பார்த்துள்ளார். போதை மாணவர் சிகப்பாகவும், வடமாநில சாயலில் இருந்ததால் கவர்னரின் உறவினர் என்று நினைத்து சந்தேகப்படவில்லை என்று அந்த போலீஸ்காரர் சொன்ன தகவல் போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சி மற்றும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. இதனால் பணியில் அலட்சியமாக இருந்த அனைவரையும் ஆயுதப்படைக்கு தற்காலிகமாக மாற்றி உள்ளனர். விரைவில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி மாணவர் ஏறி வந்த இரண்டாவது 'கேட்' வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.