/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் வாகன நெரிசலுக்கு போலீசார் தீர்வு
/
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் வாகன நெரிசலுக்கு போலீசார் தீர்வு
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் வாகன நெரிசலுக்கு போலீசார் தீர்வு
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் வாகன நெரிசலுக்கு போலீசார் தீர்வு
ADDED : அக் 27, 2024 04:05 AM

திருபுவனை : தினமலர் செய்த எதிரொலி காரணமாக மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் போக்குரவத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை, மதகடிப்பட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின், நான்குமுனை சந்திப்பில் தினம் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதை சுட்டிக்காட்டி தினமலரில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி போக்குரவத்து போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் உத்தரவின்பேரில், வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நான்கு சாலைகளிலும் நேற்று காலை முதல் போக்குவரத்து போலீசார், நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
தீபாவளியையொட்டி, வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால் பண்டிகை முடிந்த இயல்புநிலை திரும்பும்வரை அங்கு பணியை தொடர எஸ்.பி., மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார்.