/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மாஜி முதல்வர் உட்பட காங்., கட்சியினர் 103 பேர் கைது
/
இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மாஜி முதல்வர் உட்பட காங்., கட்சியினர் 103 பேர் கைது
இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மாஜி முதல்வர் உட்பட காங்., கட்சியினர் 103 பேர் கைது
இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மாஜி முதல்வர் உட்பட காங்., கட்சியினர் 103 பேர் கைது
ADDED : ஏப் 02, 2025 05:07 AM

அரியாங்குப்பம் : ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவரை தாக்கிய இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்., கட்சியினர் 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பத்தில் கடந்த 27ம் தேதி கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, அதேபகுதியை சேர்ந்த ஆனந்த், பாலா, சம்பத் ஆகியோரைபோலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனிடம், மூவர் மீதும் வழக்கு பதிய வேண்டாம் என ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசன், கூறினார். ஆனால், போலீசார், மறுநாள் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதனை அறிந்து ஸ்டேஷனுக்கு வந்த அமுதரசன், இன்ஸ்பெக்டரை பார்த்து, 'என்ன தல, நான் பேசியும் இப்படி பண்ணீட்டீங்க' என்றார். அதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், அமுதரசனை தாக்கினார்.
இதனைக் கண்டித்து காங்., கட்சியினர் நேற்று காலை 10:30 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், காங்., மூத்த தலைவர் தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலா, கார்த்திகேயன், மகளிரணி தலைவி நிஷா உள்ளிட்ட 300 பேர் அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அமுதரசனை தாக்கிய, இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
அவர்களை சீனியர் எஸ்.பி., நாரா சைத்தனியா, எஸ்.பி.,க்கள் பக்தவச்சலம், மோகன்குமார், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார், முற்றுகையிட வந்தவர்களை தடுத்தி நிறுத்தி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் 14 பெண்கள் உட்பட 103 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காங்., கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் காலை 10:30 மணி முதல் 11:30 மணிவரை ஒரு மணி நேரம் கடலுார்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதித்தது. போராட்டம் தொடரும்.
ஆர்ப்பாட்டத்தில் முன் னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், அமுதரசனை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிந்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த மனித உரிமை மீறல் குறித்து 2 நாளில் மனித உரிமை ஆணையத்திற்கு செல்வோம். அதற்குள் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்தகட்டமாக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

