/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை வில்லியனுாரில் பரபரப்பு
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை வில்லியனுாரில் பரபரப்பு
ADDED : ஜன 09, 2025 06:24 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் சமூக ஆர்வலரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது.
வில்லியனுார், கணுவாப்பேட்டை மூன்றாவது வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (எ) ரமேஷ்,50; சமூக ஆர்வலர். இவர் மூப்பனார் வணிக வளாகம் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் பகுதியில் பத்திர எழுத்தர் அலுவலகம் வைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த பூமிதேவி, அவருக்கு சொந்தமான இடத்திற்கு ரமேஷிற்கு பவர் கொடுத்துள்ளார். அந்த  இடத்தில் தில்லை நகரை சேர்ந்த கார்த்திகேயன்  வணிக வளாகம் வைத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் உள்ளது.
நேற்று முன் தினம் மாலை ரமேஷ் அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து கார்த்திகேயனிடம் ஏன் பிரச்சனை செய்கிறாய் என, கேட்டு மிரட்டி, அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிய காலதாமதம் செய்து வருவதை கண்டித்து நேற்று காலை 11:00 மணியளவில், புதுச்சேரி மாநில வன்னியர் சங்கம் மற்றும் கணுவாப்பேட்டை இளைஞர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று வில்லியனுார் பகுதியில் முழு கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

