/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோடையை வரவேற்க போலீஸ் நிலையங்கள் 'ரெடி'
/
கோடையை வரவேற்க போலீஸ் நிலையங்கள் 'ரெடி'
ADDED : பிப் 17, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில் போலீஸ் நிலையங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உள்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடைக் காலம் துவங்க உள்ளதால், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது.
இதற்காக போலீஸ் ஸ்டோர் மூலம் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வாட்டர் பியூரிபையர் மற்றும் தண்ணீரை சூடாகவும், குளிர்ச்சியாக அளிக்கும் கூலர் இயந்திரம் 37 போலீஸ் நிலையங்களுக்கு வாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் வரும் வாரத்தில் போலீஸ் நிலையத்திற்கு சென்று, வாட்டர் பியூரிபையர் மற்றும் கூலர் இயந்திரத்தை இயக்கி வைக்க உள்ளனர்.