/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு
/
ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு
ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு
ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு
ADDED : செப் 20, 2024 03:28 AM

புதுச்சேரி: கிழக்கு போக்குவரத்து போலீசார் ராஜிவ்காந்தி சிக்னல் பகுதியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண நேற்றிரவு ட்ரோன் மூலம் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து பிரச்சனைக்களுக்கு தீர்வு காணும் வகையில் டிராபிக் சிக்னல்கள், முக்கிய சாலை சந்திப்பு பகுதிகள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்றிரவு ராஜிவ் சிக்னல் பகுதிகளில் ட்ரோன் மூலம் வாகனங்கள் மற்றும் சாலைகளின் அகலத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
அதனை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.