ADDED : மார் 20, 2026 07:34 AM

வில்லியனுார்: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வில்லியனுார் பகுதியில் சீனியர் எஸ்.பி., தலைமையில் போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக மாநில எல்லை பகுதிகள் மற்றும் முக்கிய சத்திப்புகளில் போலீசார் மற்றும் தேர்தல் துறை பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வில்லியனுார் பைபாஸ் எம்.ஜி.ஆர் சிலை சதுக்கம் பகுதியில் நேற்று இரவு சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் தெற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன் முன்னிலையில்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், பெரியசாமி மற்றும் போலீசார் புதுச்சேரி -விழுப்புரம்சாலையில், சென்ற வாகனங்களைநிறுத்தி மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள், பணம் கொண்டு செல்லப்படுகிறதா என, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
