/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் இணையவழி போலீசார் எச்சரிக்கை
/
மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் இணையவழி போலீசார் எச்சரிக்கை
மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் இணையவழி போலீசார் எச்சரிக்கை
மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் இணையவழி போலீசார் எச்சரிக்கை
ADDED : ஏப் 14, 2025 04:07 AM
புதுச்சேரி: அடையாள அட்டைகளை பயன்படுத்தி, மற்றவர்களுக்கு சிம்கார்டு, வங்கி கணக்கு வாங்கி தராதீர்கள் என, இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தற்போது நடைபெறும் இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் குற்றங்கள் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக வருகிறது. அத்தகைய குற்றங்களில் சைபர் குற்றவாளிகள் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்கவைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். இவ்வாறு குற்ற வழக்குகளில் சிக்கிய நிறைய பொதுமக்கள் சிறைக்கு பின்னால் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளனர்.
இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய குற்றங்களில் சிக்கவைக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் தங்களுடைய அடையாள அட்டைகளை (ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பிற ஆவணங்களை) பயன்படுத்தி தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தரவேண்டாம். இணையவழி குற்றவாளிகள் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டை பயன் படுத்தி இணையவழி குற்றங்களில் ஈடுபடும்பட்சத்தில், அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அனைத்துவிதமான இணையவழி குற்றம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் மற்றும் தகவல் சம்பந்தமாக இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930, மற்றும் 0413-2276144,9489205246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர், தெரிவித்தார்.

