/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிடப்பில் எஸ்.ஐ., சீனியாரிட்டி 'லிஸ்ட்' 14 ஆண்டுகள் கடந்து பதவி உயர்வுக்கு ஏங்கும் போலீஸ்
/
கிடப்பில் எஸ்.ஐ., சீனியாரிட்டி 'லிஸ்ட்' 14 ஆண்டுகள் கடந்து பதவி உயர்வுக்கு ஏங்கும் போலீஸ்
கிடப்பில் எஸ்.ஐ., சீனியாரிட்டி 'லிஸ்ட்' 14 ஆண்டுகள் கடந்து பதவி உயர்வுக்கு ஏங்கும் போலீஸ்
கிடப்பில் எஸ்.ஐ., சீனியாரிட்டி 'லிஸ்ட்' 14 ஆண்டுகள் கடந்து பதவி உயர்வுக்கு ஏங்கும் போலீஸ்
ADDED : பிப் 02, 2025 04:07 AM
புதுச்சேரி போலீசில் சப்இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டவர் 5 ஆண்டுகள் பணி முடித்தால், அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டர் பதவிக்கு தகுதி பெற்றவராகி விடுகிறார்.
நான்கரை ஆண்டு பணி முடிந்ததும், சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிட்டு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். புதுச்சேரி போலீசில் கடந்த 2011ம் ஆண்டு போட்டி தேர்வு மூலம் 38 பேர் நேரடியாக சப்இன்ஸ்பெக்டர் பதவி பெற்றனர்.
சப்இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்க நேரடி நியமனம், பதவி உயர்வு பிரிவின் கீழ் உள்ள 208 சப்இன்ஸ்பெக்டர்கள் சீனியாரிட்டி லிஸ்ட் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. முதல் லிஸ்டில் ஆட்சேபனைகள் கூறியதால் அடுத்த கட்டமாக 2வது மெரீட் லிஸ்ட் 2013 நவ., மாதம் வெளியாகி, ஆட்சேபனை கோரப்பட்டது.
ஏட்டு பதவியில் இருந்து எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு பெற்றவர்கள், சப்இன்ஸ்பெக்டர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற நாளை அடிப்படையாக கொண்டு சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிப்பதிற்கு பதில், அடாக் முறையில் அரசு பதவி உயர்வு அளித்த நாளை பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி நாளாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு நேரடி நியமனம் மூலம் சப்இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை சரிசெய்து இறுதி சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடுவதற்கு பதில் அதனை போலீஸ் தலைமையகம் கிடப்பில் போட்டுள்ளது. சில போலீசார் விசாரித்தபோது, கோப்பு மாயமாகி விட்டதாக பதில் கொடுத்துள்ளனர்.
சப்இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் பதவி உயர்வு கிடைக்காததால் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பதவி உயர்வு வழங்க அரசு போலீஸ் தலைமையகம் தவறியதால், நீதிமன்றத்தை நாட ஆலோசனை நடந்து வருகிறது.