/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்'
/
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்'
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்'
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்'
ADDED : நவ 06, 2025 05:40 AM

காரைக்கால்: காரைக்காலில் காதல் ஜோடிகளிடம் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், போலீஸ்காரரை 'டிஸ்மிஸ்' செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்,35; இவர், கடந்த 2013ம் ஆண்டு புதுச்சேரி போலீசில் சேர்ந்து, காரைக்காலில் பணிபுரிந்து வந்தார்.
இவர், காரைக்காலுக்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம் அத்து மீறி நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. கடந்த 2017ம் ஆண்டு, கடற்கரைக்கு காதலனுடன் வந்த பெண்ணிடம் பணம் பறித்ததோடு, அவருக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்ததாக புகார் உள்ளது.
2018ல் காதல் ஜோடியிடம் மொபைல் போனை பறித்துக் கொண்டது தொடர்பாக அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது.
அப்போது, ராஜ்குமார், சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்து கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, கடந்தாண்டு செப்டம்பரில், காரைக்கால் கடற்கரைக்கு காதலனுடன் வந்த பெண்ணின் துப்பட்டாவை பிடித்து ராஜ்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சீனியர் எஸ்.பி., மணீஷ் உத்தரவின் பேரில், போலீஸ்காரர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், ராஜ்குமார் மீதான புகார்களை விசாரித்த டி.ஜி.பி., ஷாலினி சிங், காதல் ஜோடிகளிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த ராஜ்குமாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

