ADDED : அக் 25, 2024 06:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி மண்டலம் 27 ரோட்டரி சங்கங்களின் சார்பில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு, போலியோ விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் ஈவ்ஸ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி வைட் டவுன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஹெரிடேஜ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்டரல் சார்பில் நடந்த போலியோ விழிப்புணர்வு பேரணியை கூடுதல் துணை நீதிபதி ராஜசேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மண்டலம் 27, உதவி கவர்னர் மேரி ஸ்டெல்லா தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆப் ஈவ்ஸ் மாவட்ட தலைவர் மேரி அன்னா தயாவதி, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி லேகசி மண்டல செயலாளர் கந்தன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சிட்டி மண்டல செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் எதிரே துவங்கிய பேரணியில், பள்ளி, கல்லுாரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, அண்ணா சாலை வழியாக சென்று, பொதுமக்களுக்கு போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர்.

