ADDED : மார் 02, 2024 06:28 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : சுகாதாரத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியில், அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், சமூகவியல் கல்லுாரி, மகாலட்சுமி பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனத்தில் இருந்து 120 மாணவர்கள் பங்கேற்றனர். சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி பேரணியை துவக்கி வைத்தார்.
டாக்டர்கள் ராஜாம்பாள், அனந்தலட்சுமி, ரகுநாதன் , சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி, சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, மிஷன் வீதி, நேரு வீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
