/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 01, 2025 02:07 AM

புதுச்சேரி: தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, மாநிலத்தில் கடந்த 28ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ப ணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீன் வளத்துறை அலுவலகத்தில், ஏம்பலம் மற்றும் பாகூர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, வாக்காளர் பதிவு அதிகாரி முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டு ஓட்டுச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டறிந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார்.
இதேபோல், குருமாம்பேட்டில் கால்நடை மருத்துவ கல்லுாரியில், மண்ணாடிப்பட்டு மற்றும் திருபுவனை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடம் தகவல் சேகரிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. வாக்காளர் பதிவு அதிகாரி குமரன் உடனிருந்தார்.

