ADDED : நவ 01, 2025 02:07 AM
காரைக்கால்: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், மறைமுகமாக முதல்வரை சந்தித்து அனைத்து காரியங்களையும் சாதித்து கொள்வதாக அமைச்சர் நம்சிவாயம் கூறினார்.
காரைக்காலில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;
மாநிலத்தில் பழைய மின் கட்டணமே தொடரும். இணை ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த கூறினாலும், அரசு உயர்த்தாது. கூடுதல் தொகையை அரசே ஏற்கும். அதனால், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
காரைக்காலில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை என்பது தவறு. காரைக்காலில் 366 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களின் விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், மறைமுகமாக முதல்வரை சந்தித்து அனைத்து காரியங்களையும் சாதித்து கொள்கின்றனர். இந்த ஆட்சியில், அதிக பலனை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தான் அனுபவித்து வருகின்றனர்.
கவர்னருக்கும், முதல்வருக்கும் எந்த கருத்து வேறுபாடின்றி, ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததால் மட்டுமே, மக்களுக்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பிற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், எந்த திட்டமும் நடக்காது என்றார்.

