/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசுக்கு அதிநவீன வசதியுடன் 'போல் நெட் 2.0.,' அமைப்பு
/
போலீசுக்கு அதிநவீன வசதியுடன் 'போல் நெட் 2.0.,' அமைப்பு
போலீசுக்கு அதிநவீன வசதியுடன் 'போல் நெட் 2.0.,' அமைப்பு
போலீசுக்கு அதிநவீன வசதியுடன் 'போல் நெட் 2.0.,' அமைப்பு
ADDED : ஜூலை 13, 2025 12:19 AM
புதுச்சேரி அரசு மற்றும் போலீஸ் துறையின் முதுகெலும்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, அவசர காலத்தில் உதவக்கூடிய 'எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் சப்போர்ட்' பிரிவு இயங்கி வருகிறது. மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அதிகாரிகளுடன் அரசு முறையாக தொடர்பு கொள்ளவும், தகவல்களை பரிமாற கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த 7 ஆண்டிற்கு முன்பு 'போலீஸ் நெட்' என்கிற 'போல் நெட்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் நாடு முழுவதில் இருந்தும் தகவல்கள் புதுச்சேரி கட்டுப்பாட்டு அறைக்கு பரிமாறப்பட்டு வந்தது. இவை எழுத்து வடிவில் மட்டுமே கிடைத்து வந்தது.
தற்போது அதனை புதுப்பித்து அதிநவீன வசதியுடன் கூடிய 'போலீஸ் நெட் 2.0'., அமைக்கப்பட்டுள்ளது. இது வி.சாட் செயற்கைகோளுடன் நேரடியாக இணைப்பு பெற்றதுடன், அதிக ஸ்பெட்க்ரம் செயல்திறன், சிறந்த நெட்வொர்க் பாதுகாப்பு, சமீபத்திய இணையதள மேலாண்மை அமைப்பு தொழில்நுட்பத்தை கொண்டது.
இதன் மூலம் வானிலை தொடர்பு வலையமைப்பாகவும், தொலைதுாரம், அணுக முடியாத மற்றும் எல்லை பகுதியில் உள்ள மாநிலம், யூனியன் பிரதேச போலீஸ் நிலையங்கள், தொழில்பாதுகாப்புபடை மற்றும் சி.பி.எப்., அலுவகங்களை அணுக முடியும்.
இந்த அதிநவீன வசதி மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் எந்த நேரத்திலும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களை தொடர்பு கொள்ள முடியும்.
ஆவணங்கள் மற்றும் மல்டிமீடியா கோப்புகளை விரைவாக அனுப்பும் வசதி உள்ளது. இந்த நவீன வசதியை பேக்கிங் செய்து கொண்டு செல்லும் வசதி இருப்பதால், எங்கிருந்து வேண்டுமானாலும் மாநில அரசுகளை தொடர்பு கொள்ள முடியும். பேரிடர் காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அதிநவீன வசதி புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக பொருத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காரைக்கால், மாகி, ஏனாமில் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.