ADDED : மார் 07, 2024 04:03 AM

பாகூர் : மணப்பட்டு கிராமத்தில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்கும் பணியை,அரபிந்தோ சொசைட்டி துவங்கி உள்ளது.
பாகூர் தொகுதி, மணப்பட்டு கிராமத்தில் 27 குளங்கள் இருந்தன.
இதில், பெரும்பாலான குளங்கள் தற்போது துார்ந்து காணாமல் போய் விட்டது.எஞ்சியுள்ள சில குளங்களே பயன்பாட்டில் உள்ளன.
புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, தனியார் சுற்றுலா ஹோட்டல் நிறுவனம் மூலம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மணப்பட்டு கிராமத்தில் காணாமல் போன குளத்தை கண்டு பிடித்து துார்வாரி நீர் வளத்தை மேம்படுத்திட திட்டமிட்டுள்ளது.
இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, குளம் துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். அரபிந்தோ சொசைட்டி துணை இயக்குனர் ஜாய் கங்குலி, தனியார் சுற்றுலா ஹோட்டல் தலைமை அதிகாரி ரசூல் இர்பான், மனித வள அதிகாரி பிரபு, நீர்நிலை ஆர்வலர் கவி (எ) எழில்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

