ADDED : ஆக 09, 2011 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வம்பாகீரப்பாளையம் தட்சணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் அன்னையர் தின விழா நடந்தது.
ஆசிரியர் புரு÷ஷாத்தமன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் அச்சுதன் முன்னிலை வகித்தார். கைவினை ஆசிரியர் ஆறுமுகம், சாரம் சுப்ரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளி மொழியாசிரியர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செங்கேணியம்மாள் செய்திருந்தார். ஆசிரியை திலகவதி நன்றி கூறினார்.

