/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடும்ப பிரச்னையால் முதியவர் தற்கொலை
/
குடும்ப பிரச்னையால் முதியவர் தற்கொலை
ADDED : ஆக 11, 2011 02:51 AM
புதுச்சேரி:குடும்ப பிரச்னை காரணமாக ஓய்வு பெற்ற மில் தொழிலாளி தற்கொலை
செய்து கொண்டார்.குருமாம்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர்
ராஜ்குமார்,61.
ஓய்வு பெற்ற ஏ.எப்.டி., மில் ஊழியர். இவரது மகன்
பாஸ்கரன்,34. இவருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். பாஸ்கரனின் மனைவி
குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மகனுடன் சென்னையிலுள்ள
தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்நிலையில் பேரன் மீது அதிக பாசம்
வைத்திருந்த ராஜ்குமார், தன்னுடைய மருமகளிடம் வீட்டிற்கு வருமாறு அழைப்பு
விடுத்தும், அவர் வர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த ராஜ்குமார்
வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.மேட்டுப்பாளையம்
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.