sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதலீட்டாளர் பணம், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., கோரிக்கை

/

முதலீட்டாளர் பணம், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., கோரிக்கை

முதலீட்டாளர் பணம், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., கோரிக்கை

முதலீட்டாளர் பணம், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., கோரிக்கை


ADDED : செப் 07, 2011 12:23 AM

Google News

ADDED : செப் 07, 2011 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தனியார் நிதி நிறுவன முதலீட்டாளர்களின், பணம் மற்றும் நகைகள் திரும்ப கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தி.மு.க., துணை அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.என்.எல்., நிதி நிறுவன முதலீட்டாளர்கள் 15 ஆயிரம் பேர் 70 கோடி ரூபாய் மற்றும் வைசியாள் வீதியில் இயங்கி வந்த திருமலை பெனிபிட் பண்ட் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் 170 பேர் 4 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பலரின் நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடுத்தர குடும்பத்தினர், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், சிறு சேமிப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டன. இவற்றில் முதலீடு செய்து ஏமாந்தவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. இந்த நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு, பொது மக்களின் முதலீடுகளை விட அதிகமாகும். கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இவர்களிடம் இருந்து பணம் பெற முடியாது. எனவே முதல்வர் நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளர்களின் முதலீடுகளையும், அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளையும் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us