ADDED : செப் 15, 2011 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனூர்:செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் தேசிய ஊரக
சுகாதார இயக்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.பூமிநாதன்
வரவேற்றார்.
மருத்துவ முகாமை கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜலட்சுமி
ஜீவா துவக்கி வைத்தார். முகாமில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம்
பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர்கள் காயத்ரி, அருணாச்சலம்
தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் 500க்கும்
மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாம் ஏற்பாடுகளை ரங்கநாதன்,
மாயக்கண்ணன், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் செய்திருந்தனர்.