பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் : மொஹித் கிங்ஸ், ராயல்ஸ் அணிகள் வெற்றி
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் : மொஹித் கிங்ஸ், ராயல்ஸ் அணிகள் வெற்றி
ADDED : ஜூலை 09, 2026 02:57 AM

புதுச்சேரி: ஸ்ரீராம் கேபிடல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் மூன்றாவது சீசன் நேற்று முன்தினம் துவங்கியது. அதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் வில்லியனுார் மொஹித் கிங்ஸ் அணி, மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி மோதியது.
முதலில் களமிறங்கிய வில்லியனுார் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அணியின் ஆகாஷ் 24 பந்துகளில் 45 ரன்களும், ப்ரிதிவ் ராஜன் கண்ணா 66 ரன்களும், சமர்கான் 23 ரன்களும் எடுத்தனர்.
பின், களமிறங்கிய மாகே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.பேட்டிங்கில் 45 ரன்களும், 3 விக்கெட்கள் விழ்த்திய ஆகாஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, நடந்த 2வது போட்டியில்ல் ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணியும், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. அதில், முதலில் களமிறங்கிய ஒயிட் டவுன் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அணியின் தர்ஷன் ராஜகோபால் 46, சிவ சுபாஷ் 38 ரன்கள் எடுத்தனர். பிரனாய் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின், களமிறங்கிய ஏனாம் ராயல்ஸ் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் பரமேஷ்வரன் 66 ரன்களும், ஆதித்யா கர்வால் 29, பிரவீன் 35 ரன்கள் எடுத்தனர். 66 ரன்கள் குவித்த பரமேஷ்வரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
