/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் தொகுப்பு : எம்.எல்.ஏ., வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு : எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜன 15, 2026 07:56 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், புதுச்சேரி தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புகளான 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சக்கரை, 1 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ பச்சை பருப்பு, 300 மில்லி நெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., கிளை செயலாளர் சந்துரு, ராகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

