/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் தொகுப்பு வக்கீல் குமரன் வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு வக்கீல் குமரன் வழங்கல்
ADDED : ஜன 06, 2025 06:35 AM

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் முன்னாள் கவுன்சிலர் வக்கீல் குமரன் பொங்கல் தொகுப்பினை வழங்கி வருகிறார்.
புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு, ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வக்கீல் குமரன், தொகுதிக்குட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து விலையில்லா பொங்கல் தொகுப்பினை வழங்கி வருகிறார்.
நேற்று சின்னையபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பச்சரிசி, வெல்லம் தலா ஒரு கிலோ, அரை கிலோ பச்சை பருப்பு, 100 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை, 25 கிராம் ஏலக்காய், 15 கிராம் சிறிய நெய் பாக்கெட் அடங்கிய விலையில்லா பொங்கல் தொகுப்பினை வீடு வீடாக சென்று முன்னாள் கவுன்சிலரான, வக்கீல் குமரன் வழங்கினார்.

