/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
/
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 10, 2025 06:16 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பினை அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வழங்கி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியாங்குப்பம் தொகுதியில் அ.தி.மு.க., பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தனது சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்புகள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதன் துவக்க நிகழ்ச்சி, தேங்காய்திட்டு மாரியம்மன் கோவிலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு அரியாங்குப்பம் தொகுதி மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான இலவச கரும்பு மற்றும் பச்சரிசி, வெல்லம், பச்சபருப்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க., பொருளாளர் ரவி பாண்டுரங்கள் அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பு வழங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் ராஜா, அம்மா பேரவை இணை செயலாளர் ஜீவா, வார்டு செயலாளர்கள் ரமேஷ், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

