/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் தொகுப்பு :அமைச்சர் வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு :அமைச்சர் வழங்கல்
ADDED : ஜன 12, 2026 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரேஷன் கார்டுகளுக்கு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு மூலம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் ரேஷன் கடையில் அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், நிர்வாகிகள் தமிழ்மணி, செல்வகுமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

