ADDED : ஜன 13, 2026 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கி துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ராஜ்பவன் தொகுதி வாழைகுளம் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை அமைச்சர் லட்சுமிநாராயணன் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதில், என்.ஆர். காங்., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

