ADDED : ஜன 20, 2026 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாதானுார் உரிமை போராளிகள் சேவை குழு சார்பில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத் தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பெண்களுக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திருக்கனுார் தனியார் பள்ளி தாளாளர் அருண்குமார், பா.ஜ., பிரமுகர் தமிழ்மணி, பாரதிதாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தது. இதில், வாதானுார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன், ஆசிரியர் நாகராஜ், தனியார் கோச்சிங் சென்டர் உரிமையாளர் மவுலீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேவை குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

