
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி திருக்குறள் மன்றம் சார்பில் திருவள்ளுவர் விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.
புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
விழாவில் கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு, திருக்குறள் நெறிபரப்பாளர் விருதினை தமிழ்சங்கத் தலைவர் முத்துவுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், தொழிலதிபர் மணடெக் மணநாதன், புதிமம் தலைவர் சுந்தர லட்சுமி, நாராயணன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

