/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவிலில் பூஜை பாத்திரங்கள் திருட்டு
/
கோவிலில் பூஜை பாத்திரங்கள் திருட்டு
ADDED : அக் 27, 2024 04:01 AM
புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தர் பீடத்தில் உள்ள பித்தளை பொருட்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன்.
முத்தியால்பேட்டை, கணபதி நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா, 43; கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள மேல்மருவத்துார் ஆதி பாராசக்தி சித்தர் பீட தலைவர். இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று அதிகாலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு கோவில் உள்ளே இருந்த விளக்கு உள்ளிட்ட பித்தளை பூஜை பொருட்கள் என ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.