/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : மே 21, 2025 11:14 PM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பெரம்பை கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
வில்லியனுார் அடுத்த தமிழக பகுதியான வானுார் வட்டம், பெரம்பை ஏழை மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது. தேர் திருவிழா கடந்த 19ம் தேதி காலை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஐயனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.
20ம் தேதி அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மேல் செடல் உற்சவம், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று ஏழைமாரியம்மன் தேர் திருவிழா நடந்தது.
காலை 9:00 மணியளவில், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பெரம்பை கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் பகல் 2:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை பெரம்பை கிராம மக்கள் செய்தனர்.