/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போப் உடல் அடக்கம் புதுச்சேரியில் அஞ்சலி
/
போப் உடல் அடக்கம் புதுச்சேரியில் அஞ்சலி
ADDED : ஏப் 27, 2025 05:34 AM

புதுச்சேரி : போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்தததையொட்டி, ஜென்மராக்கினி ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ், 88, கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
அதையொட்டி, புதுச்சேரி ஜென்மராக்கினி ஆலயத்தில் கடலுார் - புதுச்சேரி மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் முன்னிலையில், போப் பிரான்சிஸ் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் சிவகுமார், காங்., வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.