ADDED : ஜன 06, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை இடுகாடு மேம்படுத்துதல் மற்றும் மதில் சுவர் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில், மடுகரை இடுகாடு மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் இராமலிங்கேஸ்வர ராவ், இளநிலைப் பொறியாளர்கள் மாணிக்கசாமி, அய்யப்பன், என்.ஆர்.காங்., பிரமுகர் தனபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.