/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
45 அடி சாலையில் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
/
45 அடி சாலையில் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 10, 2025 07:03 AM

புதுச்சேரி : வள்ளலார் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி, வள்ளலார் சாலை 45 அடி ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் இச்சாலையின் நடுவே நேற்று திடீரென 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளம் ஏற்பட்டதற்கு காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சாலையின் நடுவே செல்லும் பாதாள சாக்கடை உள்வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சரி செய்தவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, 45 அடி சாலையின் நடுவே திடீர் பள்ளம் விழுந்தது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பரவி வைரலாகியது.