தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்துறை தலைமை அலுவலகத்தை ஐ.டி.ஐ., நலச் சங்கத்தினர் முற்றுகை

மின்துறை தலைமை அலுவலகத்தை ஐ.டி.ஐ., நலச் சங்கத்தினர் முற்றுகை

மின்துறை தலைமை அலுவலகத்தை ஐ.டி.ஐ., நலச் சங்கத்தினர் முற்றுகை


UPDATED : அக் 08, 2026 05:41 PM

ADDED : அக் 08, 2026 03:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:41 PM ADDED : அக் 08, 2026 03:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தொழிற்நுட்ப சான்றிதழாளர் (ஐ.டி.ஐ.) நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு, சங்கத் தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் பிரபு தலைமை தாங்கினர். சங்க கவுரவத் தலைவர் லட்சுமணசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், பொறுப்பாளர்கள் அருள்மொழி, ரவி, கிருஷ்ணமூர்த்தி, தேவகுமார், சங்கர், ராமச்சந்திரன், பாலச்சந்திரன், குமரன், பாலமுருகன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், மின்துறையில் பணியாற்றும் உதவியாளர், ஓயர்மேன்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

காலியாக உள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் நிரப்புவதற்கு, ஓயர்மேன்களிடம் இருந்து விவரப் பட்டியல் பெறப்பட்டும், இதுவரை கோப்பு தயார் செய்யப்படாததை கண்டித்தும், கட்டுமான உதவியாளர் முதல் உதவியாளர் வரையிலான பதவிகளை ஒன்றிணைக்கும் இணைப்புச் சேர்க்கை குறித்து பேசுவதற்கு துறை செயலர் நேரம் ஒதுக்காததை கண்டித்தும், ஊதிய முரண்பாடுகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us