ஜிப்மர் செவிலியர் கல்லுாரி 20-ம் ஆண்டு நிறைவு விழா: 11-வது தேசிய மாநாடு துங்கியது
ஜிப்மர் செவிலியர் கல்லுாரி 20-ம் ஆண்டு நிறைவு விழா: 11-வது தேசிய மாநாடு துங்கியது
UPDATED : அக் 08, 2026 05:01 PM
ADDED : அக் 08, 2026 04:06 PM

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் மூன்றுநாள் செவிலியர் கல்வி தேசிய மாநாடு துவங்கியது.
ஜிப்மர் செவிலியர் கல்லுாரி தனது 20 ஆண்டுகால (2006-2026) கல்வி, ஆராய்ச்சி மற்றும் சேவைப் பயணத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முக்கிய நிகழ்வாக, “ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் ஆதார அடிப்படையிலான நடைமுறைகள் மூலம் செவிலியத் துறையை மறுவடிவமைத்தல்'' என்ற கருப்பொருளில் 11-வது தொடர்ச்சியான செவிலியர் கல்வி தேசிய மாநாடு, ஜிப்மரின் அப்துல் கலாம் அரங்கில் நேற்று துவங்கியது.
கல்லுாரி முதல்வர் குமாரி வரவேற்றார். ஒருங்கிணைப்பு செயலாளர் லட்சுமி ராமமூர்த்தி கல்லுாரியின் 20 ஆண்டுகால சாதனைகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.
தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, கடந்த இரு தசாப்தங்களாக செவிலியர் கல்வி மற்றும் சுகாதார சேவையில் ஜிப்மர் கல்லுாரி ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. ஆராய்ச்சி மற்றும் ஆதார அடிப்படையிலான பராமரிப்பில் செவிலியர்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று பாராட்டினார். கல்விப் புல முதல்வர் விக்ரம் காடே சிறப்புரை யாற்றினார்.
இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 550 செவிலியர் நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
உதவிப் பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
