தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் அருகே ரூ. 1.72 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

பாகூர் அருகே ரூ. 1.72 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

பாகூர் அருகே ரூ. 1.72 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்


UPDATED : அக் 08, 2026 04:43 PM

ADDED : அக் 08, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 04:43 PM ADDED : அக் 08, 2026 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கரையாம்புத்துார் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை கண்டுபடுத்த போதை தடுப்பு பிரிவு மற்றும் அதிரடிபடை போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கரையாம்புத்துார் போலீசார் மணமேடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில், மணமேடு பெரியார் நகரை சேர்ந்த செல்வம் 42; என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறி உள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், வீட்டின் பின்புறத்தில், 15- மூட்டைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஒரு லட்சத்து 4176 ரூபாய் மதிப்புள்ள 210 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், மற்றும் ரொக்க பணம் ரூ. 68 ஆயிரமும் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us