ADDED : நவ 18, 2026 07:45 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, காந்தி வீதியில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி எதிரே, பிரபலமான நகைக்கடை, சலுான், துணிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதில், ஜாவித் அபிப் சலுான் நுழைவு வாயிலில் இருந்த புதைவட மின்சார கேபிள் இன்று (நவ.,18) காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுதும் புகை முட்டம் ஏற்பட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி, தீயை அணைத்தனர்.
