ADDED : செப் 16, 2026 07:25 PM
பாகூர்: சேலியமேடு சமத்துவ நகரில் மின்பாதை அமைக்கும் பணியினை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
ஏம்பலம் தொகுதி சேலியமேடு சமத்துவ நகரில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு முதற்கட்டமாக சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மின்துறை சார்பில், 7 லட்சம் ரூபாய் செலவில், தெரு மின் விளக்குடன் கூடிய மும்முனை மின்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார்.
மின் துறை உதவி பொறியாளர் அன்பழகன், இளநிலை பொறியாளர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
