தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டை விற்பதாக ரூ. 20 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை 

வீட்டை விற்பதாக ரூ. 20 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை 

வீட்டை விற்பதாக ரூ. 20 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை 


ADDED : செப் 16, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். 

முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு, ஆதிமூலம் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம், 48. இவர், கடந்த 2022ம் ஆண்டு வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த பரஞ்ஜோதி, அவரது மனைவி கவிதா ஆகியோரிடம், அவர்களது 1,200 சதுர அடி உள்ள இரண்டு மாடி வீட்டை ரூ.70 லட்சத்திற்கு வாங்க ஒப்பந்தம் செய்தார். அதற்காக, மாணிக்கம் முதற்கட்டமாக ரூ. 20 லட்சத்தை கவிதாவின் வங்கிக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால், பரஞ்ஜோதி மற்றும் அவரது மனைவி கவிதா ஒப்பந்தம் செய்தபடி, வீட்டை மாணிக்கத்தின் பெயருக்கு கிரையம் செய்து தராமல் பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தி வந்தனர்.  சந்தேகமடைந்த மாணிக்கம், அந்த இடம் குறித்து விசாரித்தபோது, கணவன், மனைவி இருவரும் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து மாணிக்கம் தான் கொடுத்த ரூ. 20 லட்சத்தை, திருப்பிக் கேட்டபோது, பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில், பரஞ்ஜோதி, அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us