ADDED : மார் 19, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாயந்த லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோதண்டராமருக்கு பிரபந்த சேவை உற்சவம் நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மதியம் 1:00 மணிக்கு சாற்று முறை சேவை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

