/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழர் பாரம்பரிய சிலம்பம் பயிற்சி
/
தமிழர் பாரம்பரிய சிலம்பம் பயிற்சி
ADDED : அக் 31, 2024 05:43 AM

வில்லியனுார்: தமிழர் பாரம்பரியதற்காப்பு கலையான சிலம்பம் கலையை இளம் தலைமுறைக்கு கற்று கொடுக்கும் வகையில் வில்லியனுார் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசான் குணாளன், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.
தேங்காய்த்திட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பம் பயிற்சி கூடத்தில் கடந்த 15 வருடத்திற்கு மேலாக சிலம்பம் பயிற்சி பெற்ற குணாளன்,வில்லியனுாரில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆசான் வைரக்கண்ணு சிலம்பம் பயிற்சிக் கூடம் என்ற பெயரில் துவங்கினார்.
தற்போது வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டரா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர்.
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு சிலம்பம் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் இணைய வழியில் நடைபெற்ற அகில உலக சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தனர்.
பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி கூறுகையில், தமிழகத்தை போன்று புதுச்சேரி அரசும், சிலம்பம் கலையை விளையாட்டு துறையில் சேர்த்து தமிழக பாரம்பரிய கலை வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்' என்றார்.