/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
கோர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 08, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர் ஷாந்தினி, தீபிகா, அனுஷ்கா மற்றும் பிளஸ் 2வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் லோகேஷ்வரன், சுனில்தத் மற்றும் மாணவி அனுஷ்கா ஆகியோரை பள்ளி துணை முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.