/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடல் உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு
/
உடல் உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு
உடல் உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு
உடல் உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு
ADDED : ஜன 09, 2025 06:09 AM

புதுச்சேரி: உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞரின் குடும்பத்தினரை பாராட்டி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியினர் நன்றி கூறினர்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயக்குமார் மகன் பிரேம்குமார்,19; கடந்த 31ம் தேதி இரவு 10:00 மணிக்கு புத்தாண்டு கொண்டாட சென்றபோது பைக் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, பிரேம்குமாரின் கிட்னி, கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த பிரேம்குமார் குடும்பத்தினரை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி, நிர்வாக உறுப்பினர் அய்யனார், ஆயுட்கால உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள்சந்தித்து, உறுப்பு தானம் வழங்கிய சேவையை பாராட்டி நன்றி கூறினர்.
பிரேம்குமார் குடும்பத்தினருக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கினர்.