/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : மார் 22, 2025 03:21 AM
புதுச்சேரி: பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பிரகாஷ்குமார் பேசியதாவது:
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தியதையும் காமராஜர் வீடு கட்டும் திட்டத்திற்கான ரூ. 5 லட்சம் அறிவிப்பையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
கலை, பண்பாட்டு துறை மூலம் வழங்கப்படும் விருதுகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முத்தி யால்பேட்டை தொகுதியில் உள்ள கிளை நுாலகங்களை தரம் உயர்த்தி இ - நுாலகமாக மாற்ற வேண்டும். அரசினர் மகளிர் கல்லுாரிக்கு, கூடுதல் வகுப்பறைகள் அமைத்துதர வேண்டும்.
முத்தியால்பேட்டை பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தி, உபகரணங்கள் வழங்கிட வேண்டும். மீனவர்களின் கோரிக்கையான துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும்.
தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர், ஊழியர் களை பணியமர்த்த வேண்டும்.
பாதாள கழிவு நீர் தொட்டி அடைப்பு பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லாத தங்கும் விடுதிகளுக்கு அரசு உடனடியாக முற்றுப் பள்ளி வைத்து, முறைப்படுத்த வேண்டும். வருவாய்த்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமூக நலத்துறையின் மூலம் நாட்டுப்புற மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கும் தொழில் கருவிகள் இலவசமாக வழங்க வேண்டும்.
பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்த திட்டங்களை விரைந்து செயல் வடிவம் கொடுக்க அரசு அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.