/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட்' அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு திடீர் நிறுத்தம்': சீட்டிற்காக 7,080 மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு
/
நீட்' அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு திடீர் நிறுத்தம்': சீட்டிற்காக 7,080 மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு
நீட்' அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு திடீர் நிறுத்தம்': சீட்டிற்காக 7,080 மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு
நீட்' அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு திடீர் நிறுத்தம்': சீட்டிற்காக 7,080 மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:33 AM

நீட் அல்லாத படிப்புகளுக்கான முதற்கட்ட சீட் இடஒதுக்கீடு வரைவு பட்டியல் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 7,080 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் 3,212 பேருக்கும், மாணவிகள் 3,868 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கு 3,011 இடங்களும், கலை அறிவியல் படிப்புகளுக்கு 3,496 இடங்களும் ஒதுக்கப்பட்டது.
முதல் சுற்று கணினி கலந்தாய்வில் சீட் கிடைக்க பெற்ற மாணவ, மாணவிகள், இடம் கிடைத்த கல்லுாரியில் இன்று 5ம் தேதி காலை 11:00 மணி முதல் 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட 7,080 மாணவர்கள் தங்களுடைய அலார்ட்மெண்ட் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு நேற்று சீட் கிடைத்த கல்லுாரியில் சேர சென்றனர்.
ஆனால், எந்த கல்லுாரியிலும் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. மாணவர்கள் கொண்டு வந்த அலார்ட்மெண்ட் கடிதத்தை கல்லுாரிகள் தங்களுடைய லாகின் மூலம் இணையதளத்தின் உள்ளே சென்று உறுதி செய்ய முடியவில்லை. சேர்க்கைக்காக சென்ற மாணவர்கள், பெற்றோர்கள் பல மணி நேரமாக காத்திருந்து, கடும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையில், மாலை 4:00 மணியளவில், கோர்ட் வழக்கு காரணமாக நீட் அல்லாத படிப்புகளுக்கான, முதற்கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது என்று சென்டாக் அறிவிப்பு வெளியிட்டது.
இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கல்லுாரிகளில் சேர்க்கைக்காக சென்ற மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
என்ன காரணம்
வில்லியனுாரை சேர்ந்த எம்.பி.சி., மாணவர் ஒருவர், நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த சூழ் நிலையில், அம்மாணவரை பொது பிரிவில் சென்டாக் சேர்த்தது.
இதை எதிர்த்து அம்மாணவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அம்மாணவருக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீட்டில் சேர்த்து சீட் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இது குறித்த கோர்ட் ஆர்டர் சென்டாக்கிற்கு கிடைக்கவில்லை. அந்த மாணவர் மூலமாக சென்டாக்கிற்கு வந்து சேரவில்லை. எனவே கோர்ட் ஆர்டரை எதிர்பார்த்து காத்திருந்த சென்டாக், தற்போது முதற்கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீட்டினை நிறுத்தி வைத்துள்ளது.
ஒரு மாணவருக்காக...
எம்.பி.சி., இட ஒதுக்கீட்டின் கீழ் சீட் கேட்டு மாணவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள சூழ்நிலையில், ஒரு சீட்டினை மட்டும் ரிசர்வ் செய்து, கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தி இருக்கலாம். எந்த பிரச்னையும் வந்திருக்காது. கடந்த காலங்களிலும் இது போன்று நடந்துள்ளது.
ஆனால், சென்டாக்கில் சரியான திட்டமிடல் இல்லாததால், ஒரு மாணவருக்காக இப்போது 7,080 பேருக்கான சீட் ஒதுக்கீடு திடீரென நிறுத்தப்பட்டு, அலைகழிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இப்போது மெரிட் லிஸ்ட்டை சரி செய்து, மீண்டும் முதற்கட்ட கலந்தாய்வு நடத்திய வேண்டிய நிலைக்கு சென்டாக் தள்ளப்பட்டுள்ளது.
ஒரிரு தினங்களில் மாணவரின் சீட்டினை உறுதி செய்து, 7,080 பேருக்கான சீட் ஒதுக்கீட்டினை சென்டாக் உறுதி செய்ய வேண்டும்.