/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
ADDED : பிப் 06, 2025 06:56 AM

அரியாங்குப்பம்; தவளக்குப்பத்தில் நடந்து வரும், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டில், பைட்டர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தவளக்குப்பத்தில், பிரீமியர் லீக் கிரிக்கெட் சார்பில், 3ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, அபிேஷகப்பாக்கம் சாலை, தனியார் டீத்துாள் கம்பெனி அருகே உள்ள திடலில் நடந்து வருகிறது. தவளக்குப்பம், பூரணாங்குப்பம் உள்ளிட்ட 10 கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகிறது.
கடந்த 1ம் தேதி, காலையில் நடந்த போட்டியில், பேட்ரியாட்ஸ், ஸ்பாட்டன் அணிகள் மோதின. அதில், ஸ்பாட்டன் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்று மதியம் நடந்த போட்டியில், கிளாடியேட்டர், ஸ்மசர்ஸ் அணிகள் மோதின. அதில், 10 ரன்கள் வித்தியாசத்தில், கிளாடியேட்டர் அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, 2ம் தேதி, காலையில் நடந்த போட்டியில், கிங்ஸ், ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. அதில், ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.
அன்று மதியம் நடந்த போட்டியில், பைட்டர்ஸ், ஸ்மாஷர்ஸ் அணிகள் மோதின.
அதில், பைட்டர்ஸ் அணி 6 விக்கெட் விதத்தியாசத்தில், வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்த, பைட்டர்ஸ் அணியின் பிரேம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.