/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி சாய்ஜே கிரண் அணிக்கு முதல் பரிசு
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி சாய்ஜே கிரண் அணிக்கு முதல் பரிசு
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி சாய்ஜே கிரண் அணிக்கு முதல் பரிசு
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி சாய்ஜே கிரண் அணிக்கு முதல் பரிசு
ADDED : ஏப் 16, 2025 10:08 PM

வில்லியனுார்: ஊசுடு தொகுதி கிராமங்களுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மோகித் ரவிக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ஊசுடு தொகுதி கிராமங்களுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடேரி லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லுாரி மைதானத்தில் கடந்த 5ம் தேதி துவங்கியது.
இப்போட்டியில் அகரம் சீயோன் சீகல்ஸ், தொண்டமாநத்தம் பெல்கான்ஸ், சேதரப்பட்டு ஈகல்ஸ், பிள்ளையார்குப்பம் சாய்ஜே கிரண் ஸ்கைலாக்ஸ், கூடப்பாக்கம் மோஹித் பீனிக்ஸ் மற்றும் குரும்பாபேட் கிங் பிஷர்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் சார்பில் மொத்தம் 90 வீரர்கள் ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் அனைத்தும் லீக் சுற்றுகள் அடிப்படையில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதியது.
இறுதி போட்டியில் பிள்ளையார்குப்பம் சாய்ஜெ கிரண் ஸ்கைலாக்ஸ் மற்றும் தொண்டமாநத்தம் பெல்கன்ஸ் அணியும் மோதியது.
டாஸ் வென்ற தொண்டமாநத்தம் பெல்கன்ஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 10 ஓவரில் 89 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பிள்ளையார்குப்பம் அணி 9.1 ஓவரில் 90 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவில், wமோகித் ரவிக்குமார், சி.ஏ.பி., செயலர் ராமதாஸ், ஸ்ரீதர், அன்பரசன் மற்றும் சாய்தியாகராஜன் ஆகியோர் முதலிடம் பிடித்த பிள்ளையார்குப்பம் சாய்ஜே கிரண் அணிக்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற தொண்டமாநத்தம் பெல்கன்ஸ் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த சேதராப்பட்டு ஈகில்ஸ் அணிக்கு ரூ 30 ஆயிரம் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஊசுடு பிரீமியர் லீக் சேர்மன் பாரதி செய்தார்.