/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'பிரீபெய்டு' மின் மீட்டர்
/
புதுச்சேரியில் 'பிரீபெய்டு' மின் மீட்டர்
ADDED : ஏப் 26, 2025 02:27 AM
புதுச்சேரி,:புதுச்சேரி மின் துறைக்கு, அம்மாநில அரசு துறைகள், 481.65 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. தனியார் நிறுவனங்கள், 108.36 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.
இதனால், அரசு துறைகளுக்கு தற்போது மின் பயன்பாட்டுக்கு பிறகு கட்டணம் செலுத்தும் முறையை மாற்றி, பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து மின்துறை ஆலோசித்து வருகிறது. அவ்வாறு செய்தால், மொபைல் போன் ரீசார்ஜ் போல், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள், மின்வாரியத்திற்கு அதிக தொகை கட்டண பாக்கி வைத்துள்ளதால், இங்கும் பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

